பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள், காலியிடங்கள் விவரம் :
அ. 2 ஆண்டு பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: (Fitter- 138, Tool & Die Maker- Jig& Fixture-5, Tool & Die Maker (Die & Mould)- 5, Turner- 20, Machinist-17, Machinist (Grinder)-7, Electrician- 27, Electronics Mechanic- 8, Draughtsman (Mechanical)-5, Mechanic (Motor Vehicle)-6, Refrigeration and Air conditioning Mechanic-6, Painter (General)- 7.மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு தேர்ந்தெடுக்்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.8050 உதவித் தொகையாக வழங்கப்படும்.
ஆ. ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: (Carpenter- 6, Sheet Metal Worker-4, Computer Operator and Programming Assistant-50, Welder (Gas & Electric)- 10, Stenographer (English)- 3.
இப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.7,700 உதவித் தொகையாக வழங்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி வழங்கப்படும் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து NCVT/SCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி மையத்தில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: அப்ரன்டிஸ் விதிமுறைப்படி வயது வரம்பு இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.பயிற்சிக்கு தேரந்்தெடுக்கப்படுபவர்களின் விவரம் HAL இணையதளத்தில் செப்டம்பர் 2வது வாரத்தில் வெளியிடப்படும். அக்டோபர் 2வது வாரத்தில் பயிற்சி தொடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் தபால்/மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களுடைய கல்வித்தகுதி பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.hal-india.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘கூகுள் பார்ம்’ ஐ பயன்படுத்தி ஆன்லைனில் ஆக.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2024.