திருப்பூர்: ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பொதுக்கூட்டத்தில், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா மற்றும் திமுகவினர் குறித்து அவதூறாக பேசியதாக, புளியம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, திருப்பூரிலிருந்து நேற்று காரில் வந்த செந்தில்குமாரை, அம்மாபாளையம் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. .