சென்னை: ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தி பலகைகளை அகற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு ஒரு போதும் இந்தி திணிப்பை ஏற்காது என்று ஒன்றிய அமைச்சருக்கு ஆ.ராசா எம்பி கடிதம் எழுதியுள்ளார். முக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ந்திய ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் இந்தி பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தவே நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இது பரவலான கவனத்தையும் எதிர்ப்பையும் தூண்டியது. குறிப்பாக எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள உதகமண்டலம் ரயில் நிலையம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த ரயில் நிலையம் அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 90% பணிகள் மட்டுமே முடித்த நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் சுவரில் இந்தியில் பதாகைகள் உள்ளன. தமிழ்நாடு மொழி அடையாளம் மற்றும் கலாசார சுயாட்சியின் நீண்ட மற்றும் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது.
நமது மாநில மக்கள் நமது பிராந்திய தேவைகள் மற்றும் வரலாற்று சூழலுக்கு ஏற்ப இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். தகமண்டலம் ரயில் நிலையத்தில் சமீபத்தில் நடந்த செயல் மொழியியல் திணிப்பாக கருதப்படுகிறது. பொது இடங்களில் இந்தி மொழியை ஊக்குவிப்பது, உள்ளூர் மக்களின் மொழியியல் தேவைகளில் இருந்து துண்டிக்கப்பட்டதாக உணர்கிறது. இது ஒரு அரசியல் கூற்றாகக் கருதப்படுகிறது. உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது. உதகை ரயில் நிலையத்தில் இந்தி மொழியை விளம்பரப்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.