சென்னை: பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது இந்தி திணிப்பு எனவும் இந்தியை தவிர்த்த தமிழ்நாடு வளர்ச்சிகளை கண்டுவிட்டது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று டெல்லியில் கடந்த வெள்ளிகிழமை நடைபெற்ற 38வது கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; ” பிறமொழியாளர்களும் இந்தியை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியிருப்பது இந்தி திணிப்பு, இந்தியை தவிர்த்த தமிழ்நாடு வளர்ச்சிகளை கண்டுவிட்டது.
நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு, மக்கள் ‘பன்மைத்துவ’த்தின் அர்த்தத்தை விரைவில் புரியவைப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.