சென்னை: இந்தியை கற்பிப்பது கட்டாயம் என்றால் அதை ஒழிப்பது எங்களுக்கு கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கவிஞர் பாரதிதாசன் கவிதையை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்; இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே – நீ இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே – உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே.
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் – நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில் உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் – உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ? என்று குறிப்பிட்டுள்ளார்.