மும்பை: ஹிண்டன்பர்க் அறிக்கையில் பெரும்பாலான தகவல்களை செபி தலைவர் மாதவி, அவரது கணவர் தகவல் ஒப்புக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ள முதலீட்டு நிதியத்தில் 2015-ல் தானும், தன் கணவரும் முதலீடு செய்ததிருந்ததை மாதவி ஒப்புக்கொண்டுள்ளார். செபியில் இணைவதற்கு 2 ஆண்டுக்கு முன்பு, சிங்கப்பூரில் வசித்தபோது முதலீட்டு நிதியத்தில் முதலீடு செய்திருந்ததாக மாதவி விளக்கம் அளித்துள்ளார். ஐ.பி.இ. பிளஸ் நிதியத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருந்த அனில் அகுஜா தன் கணவர் தவலுக்கு நண்பர் என்று மாதவி தகவல் தெரிவித்துள்ளார்.