மும்பை: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து 79,281 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 153 புள்ளிகள் குறைந்து 24,213 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிவு
அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி எனர்ஜி பங்குகளின் விலை சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் பங்குகளின் விலை சரிந்து வர்த்தகம்.
அதானி குழும நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை சரிவு
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. அதானி குழும நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் வரை சரிந்தது.
அதானி குழும பங்குகள் மதிப்பு ரூ.53,000 கோடி சரிவு
பங்குகள் விலை சரிவால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் விலை 7 சதவீதம் சரிந்து ரூ.1,656க்கு வர்த்தகமாகிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்குகள் விலை 5 சதவீதமும் அதானி பவர் பங்குகள் விலை 4 சதவீதம் சரிந்து வர்த்தகம். அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூசன், அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 3 சதவீதம் வரை சரிந்துள்ளது.