சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மேலும் 29 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இமாச்சலபிரதேசத்தில் பருவமழை காரணமாக செவ்வாயன்று பல்வேறு இடங்களில் 10 மேகவெடிப்புகள், கனமழை, வௌ்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. ஆறுகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரத்தில் இருந்த வீடுகள், மாட்டுக்கொட்டகைகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மண்டியில் மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் இரண்டு உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 13ஆக அதிகரித்துள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்ட வீடுகள், 104 கால்நடை கொட்டகைகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 29 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மாயமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
இமாச்சலில் வௌ்ளத்தில் சிக்கி மாயமான 2 பேரின் சடலங்கள் மீட்பு
0
previous post