சிம்லா: இமாச்சலில் தொடர் மழை காரணமாக 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றது. சம்மர்ஹில்லில் இடிந்து விழுந்த சிவன்கோயில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. இமாச்சலில் தொடர் மழை, நிலச்சரிவு ஆகியவற்றால் இந்த வாரம் இறந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.