சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டகுஃபரில் நேற்று காலை 5 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது, கட்டிடத்தில் யாரும் இல்லை. ராம்பூரில் மேகவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிகாசேரி கிராமத்தில் 2 கொட்டகைகள் அடித்துச்செல்லப்பட்டன. இதில் இருந்த 3 பசுக்கள், 2 கன்றுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் மது காலனியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்தது. எனினும் இதில் இருந்தவர்கள் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டு இருந்ததால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. தொடர் மழை காரணமாக சிம்லா-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
இமாச்சலில் நிலச்சரிவு போக்குவரத்து முடக்கம்
0