சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாஜ ஆட்சியில் முதல்வரும், தற்போது எதிர்க்கட்சி தலைவருமான ஜெய் ராம் தாகூரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது டிரோன்கள் வட்டமடித்தன. இந்நிலையில் தனது வீடு உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாக கண்காணிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் ஜெய்ராம் தாகூர் புகார் எழுப்பினார்.
ஜெய் ராம் தாகூரின் குற்றச்சாட்டை சிம்லா ஜல் பிரபந்தன் நிகாம் லிமிடெட் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த நிறுவனம் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் வரைப்படத்தை உருவாக்குவதற்காக கணக்கெடுப்பு பணிக்காக டிரோன்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதற்காக மாநில அரசிடம் இருந்தும், எஸ்பியிடம் இருந்தும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.