Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை: சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மெகா வெடிப்பு காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பியாஸ் - காங்க்ரா கரைபுரளும் வெள்ளத்தில் தர்மசாலா நீர் மின் திட்டத்தில் ஈடுபட்டு இருந்த 20 தொழிலாளர்கள் அடித்து செல்லப்பட்டனர். இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை வெளுத்து வாங்குகிறது. காங்க்ரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் யாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கரைபுரளும் வெள்ளத்தில் தர்மசாலா நீர் மின் திட்டத்தில் ஈடுபட்டு இருந்த 20 தொழிலாளர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில், இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

குல்லு மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்புகளால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், பாலம், கடைகள் மற்றும் சாலைகளின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டனர். வீடுகளில் இருந்து பொருட்களை மீட்க முயன்ற 3 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குல்லு மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மறுபுறம் இந்துஸ்தான் திபெத் தேசிய நெடுஞ்சாலையில் ஜக்ரியில் ஏற்பட்ட நிலச்சரிவு அந்தப் பாதையில் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது.

மணாலி மற்றும் பஞ்சாரிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். பஞ்சார் பகுதியில் ஒரு பாலம் இடிந்தது. மணாலி - சண்டிகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சாலையின் ஒருபகுதி அடித்து செல்லப்பட்டது. நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை உருகியதால் காசா - சம்தூ சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மித கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குஜராத்தில் சில பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரமாக உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் வெள்ள காடாக காட்சியளிக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், உத்தரகாண்ட் மாநிலத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.