மும்பை: மும்பை செம்பூரில் என்.ஜி ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வாயிலில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகளை கல்லூரிக்குள் செல்வதை தடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர் கூறுகையில், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், அதனை அகற்றச் சொல்லுமாறு கல்லூரி முதல்வர் அறிவுறுத்தியதாக கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.