மதுரை: இலங்கையில் இருந்து இந்தியா வந்தவருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு அளித்துள்ளது. திருச்சி கொட்டபட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயமணி – என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இந்திய குடியுரிமை வழங்கிய உத்தரவை உறுதி செய்யக் கோரி ஜெயமணி என்பவர் மனு அளித்துள்ளார்.