தூத்துக்குடி: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தடையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது மற்றும் நெடுஞ்சாலையின் center medianயில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும்.
ஆனால் தனியார் நிறுவனம் அதற்கான வசதிகளை செய்யப்படவில்லை. முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கடந்த 2023ம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தாலும் மாதத்திற்கு 11 கோடி ரூபாய் சுங்க கட்டணம் மூலம் வசூல் செய்து, பராமரிப்பு பணிக்காக வெறும் 30 லட்சம் மட்டுமே செலவு செய்து வருகின்றது.
இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்தார்.
இதையடுத்து மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளது.
அனால் இன்று உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தடையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.