சென்னை: கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர்கள் ஸ்ரீ காந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடியானது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுவில் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஸ்ரீ காந்த் சார்பில் வழக்கறிஞர் கே.பிரேம்ஆனந்த், கிருஷ்ணா சார்பில் வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன்னிைலயில், நாளை விசாரணைக்கு வர உள்ளது.