புதுடெல்லி: பருவநிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் வகைகளை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பருவநிலையை தாங்கி, உயர் விளைச்சல் தரும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் வகைளில் 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் ஆகும்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலை 11 மணிக்கும் நடக்கும் விழாவில் பிரதமர் கலந்து கொண்டு பயிர் வகைகளை வெளியிடுவார். இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுவார்.பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை பிரதமர் எப்போதும் ஊக்குவித்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.