சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. உள்நாட்டில் தங்கத்தின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாகவே திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகிய முக்கிய தினங்களில் தங்கத்தின் விலை உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு அதிரடியாய் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிலவி வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. அதாவது, கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில், இந்த வாரத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த திங்கட்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 அதிரடியாக குறைந்தது.
இதேபோல் நேற்று செவ்வாய்க்கிழமையும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.45,720-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,715-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் மாதம் முதல் தேதியான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,695க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.