சென்னை : அரசின் பொது நிதியை கையாளும் அதிகாரிகள் அதை செலவிடும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.பொது நிதியை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி கருத்து கூறியுள்ளார். பூந்தமல்லி அடையாளம்பட்டு கிராமத்தில் பொது கழிப்பிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.