சென்னை: முதலமைச்சர் பற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சி.வி.சண்முகத்தின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. திமுக பிரமுகர் அளித்த புகாரில் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்திய புகாரிலும் சி.வி. சண்முகம் மீது வழக்கு பதியப்பட்டது.