மதுரை: கிரானைட் குவாரி வழக்கில் இன்று ஆஜராக இருந்த நிலையில் ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு சகாயம் கடிதம் அனுப்பியுள்ளார். பாதுகாப்பு பற்றி சகாயம் ஏற்கனவே பேசி இருந்த நிலையில் மதுரை நீதிமன்றம் காணொலியில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தனக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனக் கோரி சகாயம் கடிதம் அனுப்பியுள்ளார்.