ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து கொன்று குவித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் அந்த இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து இரண்டாம் கட்ட தலைவர்களையும் குறிவைத்து அழிக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தி தொடர்பாளர் முகமது அபிப் நேற்று லெபான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.