Saturday, February 24, 2024
Home » கொடநாடு வழக்கு தீவிரமாகி வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடநாடு வழக்கு தீவிரமாகி வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Dhanush Kumar

‘‘ஹனிபீ மாவட்டத்தில் இலைக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருப்பது எதனால்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மறைந்த 2 மாஜி முதல்வர்கள், தலைமை பொறுப்பில் இருந்தபோது, கட்சியில் கடுமையாக பணியாற்றிய தொண்டர்களுக்கு முக்கிய பதவி கொடுத்து முன்னுக்கு கொண்டு வந்தனர். தேனிக்காரர் உட்பட பலர் இப்படித்தான் பொறுப்புக்கு வந்தனர். இப்போது பணம் கொழிக்கும் நிர்வாகிகளா பார்த்து பதவியை வழங்குறாங்களாம். குறிப்பா, கட்சியின் சீனியர் சிட்டிசன்கள் பலருக்கு வாய்ப்பு தர்ரதில்லை. மறைந்த தலைவருக்கு நெருக்கமான பலரும் புறக்கணிக்கப்படறாங்களாம். ‘நாங்கல்லாம் எப்படி எல்லாமோ கட்சியை வளர்த்தோம். கட்சி தலைவர் மாவட்டத்திற்கு வரும்போது எங்கள சந்திக்காம போக மாட்டாரு. ஆனா, இப்ப பணம் படைத்தவங்களுக்கு தான் பதவியும் தர்றாங்க… தேர்தல்ல போட்டியிட சீட்டும் தர்றாங்க…’ அப்படின்னு குமுறலை வெளிப்படுத்தியிருக்காங்க… சமீபத்தில நடந்த கட்சியோட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல சேலத்துக்காரர், ‘‘நாடாளுமன்ற தேர்தல்ல வேட்பாளரா போட்டியிடுறவங்களுக்கு கட்சி மட்டும் செலவளிக்குமுன்னு நினைக்கக் கூடாது. வேட்பாளர் தரப்பில் இருந்தும் குறைந்தபட்சம் சில கோடியாவது செலவு செய்தாகணும்னு கராறா சொல்லிட்டாராம்… ஹனிபீ மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் குக்கர் தலைமையை தவிர மற்ற எல்லாருமே சாதாரணமானவங்கதான் தேர்தல்ல போட்டியிட்டு எம்பி ஆகியிருக்காங்க… அடிப்படை நிலையில இருந்து எம்பியா வந்த பின்னால பணம் படைத்தவங்களா மாறினவங்க தான்… அப்படி இருக்கையில் இப்ப மட்டும் கோடிக்கணக்கில செலவழிக்கிறவங்க தான் எம்பிக்கு நிக்கணும்னு பேசியது, ஹனிபீ மாவட்ட கட்சி நிர்வாகிகள் மத்தியில அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கொடநாடு விசாரணை எப்பிடி போயிட்டு இருக்கு..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொடநாடு கொலை- கொள்ளை வழக்கு தொடர்பா இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துக்கிட்டிருந்தது. ஆனா, இதனை அவரு முற்றிலும் மறுத்துட்டார். தன்னை பற்றி பேசிய ரெண்டு பேரிடம் தனது ராசி நம்பரான ஒரு கோடியே பத்து லட்சத்தை நஷ்டஈடா கேட்டிருக்கார். அதிலும் கோர்ட்டுக்கு சென்று வாக்குமூலம் அளிக்காமல் வீட்டிலிருந்தே பதிவு செய்யவும் அனுமதி வாங்கியிருந்தாரு. ஒரு வழக்கில் வீட்டிலிருந்தே அட்வகேட் மூலமாக வாக்குமூலம் கொடுத்திட்டாரு. ஆனா, இன்னொரு வழக்கில் கோர்ட்டுக்கு சென்று வாக்குமூலம் ெகாடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுட்டாம். இவ்வழக்கில் கேரள கூலிப்படையை அழைத்து வந்த முக்கிய குற்றவாளியான மம்மியோட கார் டிரைவரின் அண்ணன் மீது சிபிசிஐடி வழக்கு போட்டு கைதும் செஞ்சிருக்கு. ஆனா, இவரோ ெதாடர்ந்து இலைக்கட்சி தலைவர் மீது குற்றம்சாட்டிக்கிட்டே இருந்தாரு. இவரது டார்ச்சர் தாங்காத சேலத்துக்காரரு அவரு வாய் திறக்க நிரந்தர தடை பெற்றார். இந்த வழக்கு மீதுதான் இலைக்கட்சி தலைவர் சாட்சியம் அளித்திருக்கிறார். தன்னிடமும் நீதிமன்றம் விளக்கம் கேட்கும்போது, செத்துப்போன தனது தம்பி கொள்ளையடிக்க சொன்னது யாருன்னு சொன்னத புட்டுபுட்டு வைப்பேன்னு சத்தமில்லாம சொல்லிக் கிட்டிருக்காரு. அதே நேரத்துல கொடநாடு கொலை வழக்கில் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ய குஜராத்தில் இருந்து டிராய் அமைப்பு விசாரணைக்கு வருதாம். இதனால இந்த வழக்குல இன்னும் திடுக்கிடும் தகவல்லாம் வெளியாகும் என்பதால இலைக்கட்சி தலைவர்களிடையே பீதி ஏற்பட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆனாக்கா அந்த மடம், ஆவாங்காட்டி சந்த மடம் என்ற போக்கில் சிட்டிங் எம்பி நிலை இருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல ஆறு அணி தொகுதி எம்பியாக இருப்பவர் மாஜி கதர்கட்சி மாநில தலைவரான கண்ணனின் மறுபெயர் கொண்டவரின் மகனான, பாற்கடல் துயிலும் கடவுளின் பெயர் கொண்டவர். இவர் கடந்த முறை தேர்தலுக்கான செலவை இங்கு கூட்டணி கட்சியினருக்கு கடைசி வரை கொடுக்கவே இல்லையாம். அதை கிரிவலம் மாவட்ட உள்ளூர் அமைச்சர் அப்போது பொருட்படுத்தாமல், உங்கள் கைகாசை போட்டு செலவு செய்யுங்க. அப்புறமா அவரிடம் வாங்கி விடலாம் என்று சொல்லி கூட்டணி கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தினாராம். அதுக்கேத்த மாதிரி பாற்கடல் துயிலும் பெயரை கொண்டவர் எம்பியாகியும் பணத்தை செட்டில் செய்யவில்லையாம். பின்னர் ஒரு வழியாக பேர் கெட்டுப்போகுமே என்ற எண்ணத்தில் தவணை முறையில், தனக்கு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த பணியில் கிடைத்த வருவாயை கொண்டு கொடுத்து முடித்தாராம்.

மீண்டும் தனக்கே சீட் வேண்டும் என்று செங்கோட்டை தலைமை வரை தனது தந்தையின் மூலம் மூவ் செய்து வரும் இவர் மீது சொந்தக்கட்சிக்காரர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சிக்காரர்களும் செமகடுப்பில் உள்ளார்களாம். அதனால் இப்போது, ஆனாக்கா அந்த மடம், ஆவாங்காட்டி சந்தை மடம் என்ற கதையாக தேர்தலில் சீட் கிடைக்காவிட்டால் மாநில தலைவர் பதவியையாவது பிடிக்க வேண்டும் என்று செங்கோட்டை நகரில் தனது லாபி மூலம் மல்லு கட்டுகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஓசி டிவி விவகாரம் பற்றி ரோல்காலில் லெப்ட் ரைட் வாங்கிய காக்கி அதிகாரி பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்துல இருக்குற நகர ஸ்டேஷனுல பணியாற்றுன கடைசியில் ராமனின் மற்றொரு அவதார பெயர் கொண்ட ஒரு அதிகாரி சமீபத்தில் டிரான்ஸ்பருல போனாரு. அதுக்கு முன்னாடி லோக்கல் மணல் கடத்தல்காரரு ஒருத்தருகிட்ட இருந்து சக காக்கிகள் மூலம் ஒரு டிவிய வாங்கிட்டு போனாராம்…. இந்த விவகாரம் புதுசா பொறுப்பேற்ற ஆங்கில 11வது மாதத்தோட முதல் ரெண்டு எழுத்துக்களில் தொடங்கும் பெயர் கொண்ட அதிகாரிக்கு தெரிய வந்துச்சாம்.. இதனால சம்பந்தப்பட்ட மன்னர் பெயர் கொண்ட காக்கியையும், சத்தியமான பெயர் கொண்ட காக்கியையும் ரோல்கால்ல லெப்ட் அன்ட் ரைட் வாங்குனாராம்… இதனால அந்த ரெண்டு காக்கிங்களும் அரண்டு போயிருக்காங்களாம். இந்த வெவகாரம் தலைநகரு வர போயிட்டதால டிரான்ஸ்பருல போன அதிகாரியும், சம்பந்தப்பட்ட ரெண்டு காக்கிகளும் கிலியில இருக்காங்களாம்” என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

seven + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi