Saturday, April 13, 2024
Home » போகிற இடமெல்லாம் பொய் பேசுகிற மலையின் வாய்க்கு பூட்டுப்போட்ட சமூக ஆர்வலரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

போகிற இடமெல்லாம் பொய் பேசுகிற மலையின் வாய்க்கு பூட்டுப்போட்ட சமூக ஆர்வலரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Dhanush Kumar

‘‘போட்டோக்கு போஸ் கொடுத்து சிக்கல்ல மாட்டிக்கிட்டாங்களாமே இலை கட்சி பெண் நிர்வாகி…’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேம்மான்னு ரத்தங்களே வசைபாடுறாங்களாம். குயின்பேட்டை மாவட்டத்துல வா என்று தொடங்கி ஜா என்று முடியுற ஏரியாவுல, அண்ணா பெயர்ல லேடிஸ் காலேஜ் இயங்கி வருது. இந்த காலேஜ்ல, பர்மிஷன் இல்லாம சில நாளுக்கு முன்னாடி, காலேஜ் அதிகாரிங்க, பணியாளருங்க வர்றதுக்கு முன்னாடியே, இலைகட்சிய சேர்ந்தவரான நடிகை பெயரை கொண்டவங்க, லேடிஸ் நிர்வாகிங்க சிலர கூட்டிக்கிட்டு காலேஜுக்குள்ள போயிட்டாங்களாம். அங்க டாய்லெட் கிளீன் செய்றது போல வீடியோ, போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவுல போட்டாங்களாம். இதுல, இவங்க போட்டோ எடுக்க சுத்தம் செஞ்ச டாய்லெட் பயன்பாட்டுலயே இல்லையாம். மூடிவெச்சிருந்ததை திறந்து இப்படி செஞ்சிருக்குறாங்களாம். இதனால அதிர்ச்சியான கல்லூரி அதிகாரிங்க, காக்கிகள் நிலையத்துல புகார் செஞ்சிருக்காங்க. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேம்மான்னு, இலைகட்சியில இருந்தே நிர்வாகிங்க வசைபாடி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அந்தக் கட்சி மீனவர்களை புறக்கணிக்கிறதா புகார் வருதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் தென்கோடி மாவட்டத்தில் காவி கட்சியில் மீனவ பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவி தலைவர் நடைபயணம் மேற்கொண்ட போது மீனவ பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, மேடையில் ஏற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தலைவரிடமே மீனவபிரதிநிதிகள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் காவி தலைமை மாவட்டத்தில் 33 பேர் கொண்ட தேர்தல் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் மீனவ பிரதிநிதி யாரும் இடம்பெறவில்லையாம். இந்த மாவட்டத்தில் கடலோர மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள் என 2 லட்சத்துக்கும் மேல் மீனவ வாக்குகள் உள்ளன. எங்களின் வாக்கு வேண்டாம் என காவி கட்சி நினைக்கிறதோ என அக்கட்சியில் உள்ள மீனவர்கள் புலம்பி வருகின்றனர். தேர்தலில் இது வெளிப்படும் என்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகள் போட்டியிட தயக்கம் காட்டுவதால் புதியவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு பண்ணியிருக்குதாமே இலை..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இலை கட்சியில் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவாகாத நிலையில் டெல்டாவில் கடலோரம், நெற்களஞ்சியம், மலைக்கோட்டை, சின்ன மாவட்டத்தில் இலை கட்சி சார்பில் போட்டியிட ஆட்களை பிடிக்கும் பணியில் இலை கட்சி தற்போது தீவிரமாக இறங்கியுள்ளதாம்.. இதில் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டுகின்றனர். தலைமை அறிவித்தும் அவர்கள் பிடி கொடுக்காமல் இருக்கிறார்களாம்… நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, எந்தெந்த கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதே இன்னும் முடிவாகவில்லை. எப்படி தேர்தலில் போட்டியிடுவது. அப்படியே போட்டியிட்டாலும் யார் செலவு செய்வது. ஒதுங்கியே இருப்பது நல்லது என நிர்வாகிகளுக்குள் பேசிகிட்டங்களாம்… இந்த தகவல் தெரிய வந்த தலைமை நிர்வாகிகள் மீது உச்சகட்ட டென்சனில் இருக்காங்க. இனி இவர்களை நம்புவது வேஸ்ட் தான். இதனால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என தலைமை களத்தில் இறங்கியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தமிழகத்தில் மலராத கட்சியின் தலைவரான மாஜி போலீஸ்காரர் ரொம்பவே ஷாக்கா இருக்காராம். தனது அடிமையாக்கி, கைப்பாவை ஆக்கிடலாமுன்னு நினைத்து, இலைக்கட்சி தலைவரை ரொம்பவே நிந்தனை பண்ணிட்டாராம். இதனால தன்மானத்தோடு இலைக்கட்சி தலைவர் வெளியே போயிட்டாராம். இதனால அக்கட்சியோட கூட்டணி வைக்க யாரும் வரலயாம். இந்த நிலையில், வழக்கும் மாஜி போலீஸ் அதிகாரியை துரத்துதாம். அரசியலில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எத்தனை பொய்களையும் வாய் கூசாமல் பேசலாம். ஒன்றியத்திலிருக்கும் பவர் அனைத்தும் தன்னிடம் தான் இருக்கிறது. என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாதுன்னு நினைச்சிக்கிட்டிருந்தாராம்.

ஆனால் மாங்கனி சிட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர், கோர்ட்டு மூலமாக அவருக்கு கடிவாளம் போட்டு வச்சிருக்காராம். மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், மாஜி போலீஸ் அதிகாரியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, கடும் எச்சரிக்கையும் விட்டிருக்காம். இதனால சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை கேட்டிருக்காராம். எத்தனை நீதிமன்றம் சென்றாலும் விடப்போவதில்லைன்னு சமூக ஆர்வலர் துரத்திக்கிட்டிருக்காராம். அதோட மட்டுல்லாமல், ரத்தத்தால் அபிசேகம் நடத்த வேண்டியதிருக்கும் என்ற சர்ச்சை பேச்சு வழக்கிலும், மாஜி போலீஸ்காரர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்காராம். பொய்யான தகவலை பரப்பிய இந்த வழக்கிலும், அவரை விடப்போவதில்லையாம். இதன்மூலம் பொய் பேசுவதற்கு ஒரு பூட்டு போட போவதாகவும் அந்த சமூக ஆர்வலர் மார்தட்டி சொல்றாரு…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi