ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் எச்எப் டீலக்ஸ் பைக்கின் கேன்வாஸ் பிளாக் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. அலாய் வீல், இன்ஜின், முன்புற போர்க் உட்பட பைக்கின் அனைத்து பகுதிகளும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டியூப்லெஸ் டயர்கள், செல்ப் ஸ்டார்டர் மற்றும் செல்ப் ஐ3எஸ் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஷோரூம் விலையாக சுமார் ரூ.60,760 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 7.9 பிஎச்பி பவரையும் 8.05 என்எம் பார்க்கையும் வெளிப்படுத்தும்.