Friday, March 1, 2024
Home » எக்ஸ்ட்ரீம் 125ஆர்

எக்ஸ்ட்ரீம் 125ஆர்

by Kalaivani Saravanan

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம், புதிய எக்ஸ்ட்ரீம் 125ஆர் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தில் இளைஞர்களைக் கவரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11.5 பிஎச்பி பவரையும் 10.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. முன்புறம் 37 மி.மீ தலைகீழ் வடிவ டெலஸ்கோப்பிக் போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன.

எக்ஸ்ட்ரீம் 200 எஸ்-ல் உள்ளது போன்ற எல்இடி ஹெட்லாம்ப், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிங்கிள் சானல் ஏபிஎஸ் மற்றும் ஐபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.95,000 எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.99,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

7 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi