ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதிலிருந்து தமிழ் நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி கூறியதாவது: ஒரு பிரபல டைரக்டர் இருக்கிறார். கதாநாயகிக்கு டேக் ஓகே செய்யவே மாட்டார். முதல் நாள் முழுக்க ரீடேக் கொடுத்து அந்த நடிகையை பாடாய்படுத்தி எடுத்து விடுவார். ஆனால் 3வது நாள் வரும்போது அவர் முதல் டேக்கிலேயே ஓகே என்று அந்த கதாநாயகியை தேர்வு செய்து விடுவார். இது அங்கு இருக்கும் எல்லோருக்கும் அவர் எதனால் இப்படி நடந்து கொள்கிறார் என்பது தெரியும். ஆனால் எல்லோரும் அந்த டைரக்டர் போல இருப்பாங்க என்று சொல்லவும் முடியாது. அதுபோல எனக்கும் இந்த மாதிரி பிரச்னைகள் நடந்திருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் நடந்து இருக்கிறது.
அதற்காக என்னை ஒரு படத்தில் இருந்து தூக்கியும் இருக்கிறார்கள். டைரக்டருடன் நான் படுக்கையை பகிரவில்லை என்று என்னை கிட்டத்தட்ட மூன்று படங்களில் இருந்து நீக்கி விட்டார்கள். அதுபோல ஹீரோவுடன் ஒத்துப்போக முடியாது என்று நானே ஒரு படத்திலிருந்து விலகி விட்டேன். அதுபோல இன்னொரு படத்தை முடித்துவிட்டு அந்த நடிகரோடு நடிக்கவே மாட்டேன் என்றும் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன். இப்படி சினிமா உலகத்தில் வெளியே தெரியாத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இதே பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது.