புதுடெல்லி: டெல்லியில் ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக தலைவர் பவன் காந்த் முஞ்சாலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பவன் காந்த் முஞ்சால்(69)மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் பவன் கந்த் முஞ்சாலுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் அலுவலகங்கள் மற்றும் முஞ்சாலுக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.