ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மோட்டார் சைக்கிளின் 2024 எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 163.2 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் மற்றும் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 16.6 பிஎச்பி பவரையும், 14.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன. டூயல் ஏபிஎஸ், பேனிக் பிரேக் அலர்ட் சிஸ்டம் உள்ளது. நியான் ஷூட்டிங் ஸ்டார் மற்றும் ஸ்டீல்த் பிளாக் உட்பட 2 வண்ணங்களில் கிடைக்கிறது. ஷோரூம் விலை சுமார் ரூ.1,38,000. எக்ஸ்ட்ரீம் 160 வரிசையில் முன்பிருந்த பிரீமியம் வேரியண்ட்டை விட இது ரூ.2,000 அதிகம்.