ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 210 என்ற அட்வஞ்சர் மோட்டார் சைக்கிளை பாரத் மொபிலிடி எக்ஸ்போ மூலம் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 210 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு 4 வால்வு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 24.6 பிஎச்பி பவரையும் 20.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.
எல்இடி லைட், 4.2 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, ஸ்மார்ட் போனை இணைத்துக் கொள்ளும் வசதி, டூயல் சானல் ஏபிஎஸ் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.76 லட்சம்.