ஹீரோ நிறுவனம், விடா என்ற பெயரில் எலெக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது புதிதாக 2 எலெக்ட்ரிக் டூவீலர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சந்தைப் போட்டியை சமாளிக்கும் வகையிலும், எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இடத்தை தக்க வைக்கும் முயற்சியாகவும் தற்போது சந்தையில் உள்ளதை விட குறைந்த விலையில் இந்த ஸ்கூட்டர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் இவை சந்தைப்படுத்தப்படலாம் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.