ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், எக்ஸ்பல்ஸ் 210 என்ற மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் 400 சிசி திறன் உட்பட இரண்டு எக்ஸ் பல்ஸ் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது. இதில் தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்படுவது 210 சிசி இன்ஜின் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கரீஷ்மா எக்ஸ்எம்ஆர்-ல் உள்ள அதே இன்ஜின் இடம் பெறும் எனவும், தற்போது சந்தையில் உள்ள 200 4வியை விட விலை சற்று கூடுதலாக இருக்கும். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.47 லட்சம் முதல் ரூ.1.55 லட்சத்துக்குள் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ மோட்டார் எக்ஸ்பல்ஸ் 210 என்ற மோட்டார் சைக்கிள்
previous post