Thursday, February 29, 2024
Home » ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

by Porselvi

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டில் நில மோசடி மூலம் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன், ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட பலர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் பின் இரவு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த ஹேமந்த் சோரன் அவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்று கொண்டார். புதிய முதல்வராக போக்குவரத்து துறை அமைச்சரான சம்பாய் சோரனை ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை விசாரணை அமைப்பு மூலம் துன்புறுத்துவது தரம் தாழ்ந்த நடவடிக்கை ஆகும். விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது வெளிக்காட்டுகிறது.பாஜகவின் அநாகரிகமான யுக்திகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பணிந்து போகாமல் ஹேமந்த் சோரன் வலுவுடன் எதிர்த்து நிற்கிறார். அடக்குமுறைகளை தாண்டி பாஜகவுக்கு எதிரான போரில் உறுதி காட்டும் சோரனின் நிலைப்பாடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியது,”இவ்வாறு தெரிவித்தார்

You may also like

Leave a Comment

ten + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi