கேரளா: ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை வரும் 9ம் தேதி கேரள அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். விடுபட்ட பக்கங்கள் உட்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது. ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு, முன்னதாக அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.