சென்னை: ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட உலகிலும் ஒரு குழு விரைவில் அமைக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். தமிழ் சினிமாவிலும் காலம் காலமாக குற்றச்சாட்டு இருந்து கொண்டுதான் உள்ளது; இங்கும் அதுபோல் பிரச்சனைகள் உள்ளது. தமிழ் திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.