உதகை: உதகை அருகே காட்டுயானைக்கு அத்துமீறி உணவு அளித்த தனியார் தங்கும் விடுதியை 3 நாளில் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மசினகுடி அருகே ஆச்சக்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஆவடேல் என்ற தனியார் விடுதியினர் காட்டுயானைகளுக்கு உணவளிப்பதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.