கர்நாடகாவில் தெருநாய் கடித்த 3.5 வயது சிறுமியை சிகிச்சைக்காக பைக்கில் அழைத்துச் சென்ற குடும்பத்தை நிறுத்தி, ஹெல்மெட் இல்லையென போக்குவரத்து காவலர் விசாரணை நடத்தினர். அவரிடம் விளக்கிவிட்டு புறப்படும்போது மற்றொரு காவலரும் வழிமறித்ததால் குழப்பம் ஏற்பட்டு, தந்தை திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் தவறி கீழே விழுந்த குழந்தை, பலத்த காயமடைந்து உயிரிழந்தது. காவலர் அத்துமீறியதாக உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதையடுத்து 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஹெல்மெட் இல்லையென போக்குவரத்து காவலர் விசாரணை: குழந்தை உயிரிழப்பு
0