ருத்ரபிரயாக்: கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நேற்று விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தரகாண்டின் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சார்பில் ஹெலி ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று கேதார்நாத்தில் சுவாசப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட பக்தரை மீட்பதற்காக சென்றது. அப்போது திடீரென ஹெலி ஆம்புலன்சின் வால் ரோட்டார் உடைந்ததால் விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றார். அப்போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானலும் பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்கவில்லை. ஹெலிகாப்டரில் இருந்த 2 மருத்துவர்கள் மற்றும் விமானி உட்பட 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கேதார்நாத்தில் ஹெலி ஆம்புலன்ஸ் விழுந்து விபத்து
0