சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள், செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.