Wednesday, December 6, 2023
Home » வங்கக்கடலில் காற்று சுழற்சி நீடிப்பதால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் காற்று சுழற்சி நீடிப்பதால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழை

by Francis

சென்னை: குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால், தமிழ்நாட்டில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நேற்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று காலையில் இருந்தே லேசானது முதல் மிதமான மழை பெய்தது, சென்னை டிஜிபி அலுவலகம், பொன்னேரியில் 90 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை ஆட்சியர் அலுவலகம் 80மிமீ, தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், அயனாவரம், ராயபுரம், அண்ணா பல்கலைக் கழகம் 70மிமீ, மணலி, ஐஸ்அவுஸ், எண்ணூர், பெரம்பூர், சோழிங்கநல்லூர், அண்ணாநகர் 60மிமீ, திருவொற்றியூர், திருவிக நகர், கத்திவாக்கம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், தேனாம்பேட்டை 50மிமீ, கொளத்தூர், அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், சோழவரம் 40மிமீ, புழல், உத்தண்டி, அடையாறு, செய்யூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மதுரவாயல், திருக்குவளை, வானகரம், தரமணி, கோடம்பாக்கம், கேளம்பாக்கம் 30மிமீ, மாதவரம், ெபருங்குடி, கொரட்டூர், மாதவரம், மாமல்லபுரம், ஆலந்தூர், திருப்போரூர், நந்தனம், முகலிவாக்கம், சென்னை விமானநிலையம், எம்ஜிஆர் நகர், திருவூர், ஆவடி 20மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர கொளப்பாக்கம், கோடியக்கரை, வேளாங்கண்ணி, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, தரங்கம்பாடி, சத்யபாமா பல்கலைக் கழகம், பள்ளிக்கரணை, மரக்காணம், குன்றத்தூர், ஊத்துக்கோட்டை, சிவகங்கை, கிருஷ்ணகிரியில் தலா 10மிமீ மழை பெய்துள்ளது.

இதற்கிடையே, கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், குமரிக் கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வரும் 27ம் தேதி வரையில் தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?