சென்னை: சென்னையில் இன்று இரவும் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.