டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகள் மழை நீரால் பாதிக்கப்பட்டள்ள நிலையில், மிண்டோ சாலையானது மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், அப்பகுதி வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.