சென்னை: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் இன்று மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறித்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் மேற்குவங்கம், ஜார்கண்ட் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவாரூரில் மதியம் 1 வரை மிதமான மழை பெய்யும்.