சென்னை: விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் கார், பைக் மற்றும் பஸ்களில் ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்பி வருவதால் பரனூர் சுங்கசாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தங்கள் சொந்த ஊரில் விடுமுறை தினத்தை கழிக்க பலர் குடும்பம் குடும்பமாக சென்றனர். இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்களுடன் பெற்றோர் சென்னை திரும்ப தொடங்கினர்.
பஸ் மற்றும் கார்கள், பைக் என கிடைத்த வாகனத்தில் சென்னைக்கு வந்தனர். இதனால் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்ல பரனூர் சுங்கசாவடியில் 6 பூத்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல 6 பூத்களும் உள்ளன. ஆனாலும் பரனூர் சுங்கசாவடியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குவாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன. மாற்று ஏற்பாடு செய்தும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.