குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதன்படி, இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், நாளை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (04.11.2023) அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.