செங்கல்பட்டு: ஜி.எஸ்.டி சாலையில் அதிக பாரத்தை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே மல்ராசபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருசிலர் அளவுக்கு அதிகமான போர்வைகளை அடிக்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், கார், லாரிகள், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்கின்றன.
இந்த ஜி.எஸ்.டி சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் தள்ளாடியபடி செல்பவர்களால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அல்லது வணிக வரித்துறை அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி வரும் இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். அபராதம் விதித்தால் மட்டுமே அதிக பாரம் ஏற்றி வருவதையும், விபத்துக்களையும் தடுக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.