உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் கோக்கால் பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக ஒரு சில கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில் அங்கு புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கூடலூர் பகுதியை ஒட்டியுள்ள கோக்கால் என்னும் பகுதியில் ஏழு வீடுகளில் திடீரென பிளவு ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள முதியோர் கட்டடம் ஒன்றும் மண்ணுக்குள் புதைத்து வருகிறது. இது தொடர்பாக இப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். தற்போது இந்த பகுதியில் இந்திய புவியியல் மூத்த வல்லுநர்கள் இருவர் இப்பகுதியில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், மழை அதிகரிக்கும் பட்சத்தில் ஏற்கனவே இந்த பகுதியில் ஆறுகள், நீரோடைகள் இருந்திருக்கலாம் எனவும் அதனால் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்து நாளை முதல் அதிநவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.