கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை தொடரில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மலையேறிய பெண் பக்தர் உட்பட இருவர் உயிரிழந்தனர். 2 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் பூட்டப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் உயிரிழந்த செல்வகுமார் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து மேலே சிக்கியுள்ள பக்தர்களை வனத்துறையினர் கீழே இறக்கினர். மேலும், மலையில் உள்ள பெங்களூரை சேர்ந்த 7 பேரை வனத்துறையினர் அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் கனமழை: வெள்ளியங்கிரி மலையில் சிக்கியுள்ள 7 பேரை மீட்கும் பணி தீவிரம்
0