நீலகிரி: கனமழையால் உதகை எல்க்ஹில் பகுதியில் 50 மீட்டர் தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீட்டின் அடியில் இருந்த மணல் அரிக்கப்பட்டதால் வீடு அந்தரத்தில் தொங்கியது. பயன்பாட்டுக்கு இல்லாத இடம் என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.