பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் வடக்கு சீனாவில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பெய்ஜிங் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஆறுகளிலும், சாலைகளிலும் வெள்ளம் பெறுக்கெடுத்து செல்கிறது. வெள்ளநீரில் கார்கள் அடித்து செல்லபடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றபட்டு வருகின்றனர். லட்ச்சகணக்கான மக்கள் மீட்கபட்டு வரும் சூழலில் அவர்களுக்கு ராணுவம் வாயிலாக நிவாரண பொருட்களும் வழங்கபட்டு வருகிறது. ட்ரோன்கள் வாயிலாகவும் மக்களுக்கு பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.
பெய்ஜிங் பகுதியில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. 744.8 மி.மீ மழை கொட்டி தீர்த்ததில் நகரமே தத்தளிக்கிறது. கனமழை வெள்ளத்திற்கு 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் மாயமானதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. பெய்ஜிங் பகுதில் கொட்டிய திடீர் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.